சந்தன கட்டைகள் பதுக்கல் பெண் உள்பட 3 பேருக்கு அபராதம்

நாமகிரிப்பேட்டை அருகே சந்தன கட்டைகளை பதுக்கிய பெண் உள்பட 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2023-08-04 18:45 GMT

ராசிபுரம்

சந்தனை கட்டை

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு கிடைத்த தகவலின் படியும், அவரது உத்தரவின் பேரிலும் முள்ளுக்குறிச்சி வன சரக அலுவலர் அன்னப்பன், நாமக்கல் வனச்சரக அலுவலர் பெருமாள், ராசிபுரம் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன், வனவர்கள், வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் முள்ளுக்குறிச்சி வனச்சரகம் மங்களபுரம் பிரிவு மற்றும் உரம்பு ஆயில்பட்டி காப்புக்காடு, நரைக்கிணறு காப்புக்காடு பகுதியில் சந்தன கட்டைகள் பதுக்கப்பட்டு உள்ளதா? என்ற சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தன கட்டைகளை வெட்டி சேகரித்து வைத்திருந்ததாக மங்களபுரம் அருகே உள்ள தாண்டா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி (வயது 43), சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பாப்பாத்தி (48), அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (63) ஆகிய 3 பேரையும் வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.

அபராதம்

இதில் அவர்கள் சந்தன மரத்துண்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 7 கிலோ சந்தன மரத்துண்டுகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இதில் முத்துசாமிக்கு ரூ.75 ஆயிரமும், பாப்பாத்திக்கு ரூ.60 ஆயிரமும், கந்தசாமிக்கு ரூ.15 ஆயிரமும் உள்பட அவர்கள் 3 பேருக்கும் மாவட்ட வன அலுவலர் ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தார். இதையொட்டி அவர்களிடமிருந்து அபராத தொகையை வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்