இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி அருகே முல்லைநகரில் பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்கு அருகில் மற்றொரு மத வழிபாட்டுத்தலம் கட்டப்படுவதை கண்டித்தும், மதமோதல்கள் ஏற்படாமல் தடுக்க கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் இதுதொடர்பாக மனுவை கொடுத்தனர்.