இந்து வியாபாரிகள் சங்க நிர்வாக குழு கூட்டம்
இந்து வியாபாரிகள் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. சங்க பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மந்திரமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வி.பி.ஜெயக்குமார், இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு வேண்டுகோளின்படி இந்து வியாபாரிகள் நலச்சங்க உறுப்பினர்கள் அனைவரது கடை வாசல்களில் தேசிய கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.