இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம்

சீர்காழியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-07-10 18:00 GMT

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சாமிநாதன், இந்து முன்னணி ஒன்றிய அமைப்பாளர் பூபதி வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நாகமுத்து வரவேற்றார். மாநில அமைப்பாளர் பக்தன், கட்டளை தம்பிரான் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்