இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-12 19:47 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் இளைஞர்கள் நலனை காக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார். தென் மண்டல தலைவர் ராஜா பாண்டியன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

இதில் பாளையங்கோட்டை பகுதி தலைவர் வேம்பன், மாநகர தலைவர் செல்வன், நிர்வாகிகள் சின்னதுரை, சங்கர், மந்திரம், வடிவேல், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்