இந்து மக்கள் கட்சியினர் கள் குடிக்கும் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் கள் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-06 20:26 GMT

இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ராஜா, மாநில முதன்மை செயலாளர் கார்த்தீசன், மாநிலச் செயலாளர் வசந்தகுமார், மாநில துணைத்தலைவர் உடையார், ராதாபுரம் ஒன்றிய தலைவர் செல்வகுமார் மற்றும் பனை தொழிலாளர்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கள் குடிக்கும் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் மதுக்கடைகளையும், போலி மதுக்கடைகளையும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக மூட வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிறு பாத்திரத்தில் கள் போன்ற திரவத்தை ஊற்றி ஆண்களும், பெண்களும் குடித்து போராட்டம் நடத்தினர். கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கள் பாட்டில்களை பறிமுதல் செய்து முகர்ந்து பார்த்தனர். மேலும் அது கள் தானா? என்று ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நெல்லை கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்