வீரபாண்டி கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்ய கோரிக்கை

வீரபாண்டி கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-05-05 20:30 GMT

இந்து முன்னணி தேனி ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில், நகர தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 9-ந்தேதி தொடங்க உள்ளது. இங்கு பக்தர்கள் போதிய கழிப்பறை வசதி இன்றியும், ஆற்றில் குளிப்பதற்கு போதிய வசதியின்றியும் பரிதவித்து வருகின்றனர்.

ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்துவிட்டு பழைய துணிகள், பூஜைப் பொருட்களை ஆற்றுக்குள் வீசிச் செல்வதால், அதே ஆற்றுக்குள் புனித நீராடும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். பக்தர்கள் தங்குவதற்கு கொட்டகைகள் அமைக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்