உடன்குடி:
உடன்குடி ஒன்றியம் செம்மறிக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி கூட்டம் நடைபெற்றது. தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். துணை தலைவி மல்லிகா, பொதுச்செயலாளர் செல்வி, செயலாளர்கள் அண்ணபுஷ்பம், சுயம்புகனி, பத்திரகாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகேஸ்வரி, பட்டுக்கனி கூட்டத்தை வழிநடத்தினர்.
இதில் இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 27-ந் தேதி தமிழகத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட கோவில்களில் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.