காவிரி பிரச்சினையை தீர்க்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் காவிரி பிரச்சினையை தீர்க்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-10-14 21:30 GMT

இந்து மக்கள் கட்சி சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி துணைத்தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல அமைப்பாளர் யோகேஷ்குமார் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 46 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் உள்ள காவிரி பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்த வேண்டும். கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது. காவிரி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் கர்நாடக மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்