இந்து முன்னணியினர் மாலை அணிந்து சிறப்பு பூஜை
இந்து முன்னணியினர் மாலை அணிந்து சிறப்பு பூஜை செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதையடுத்து சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு இந்து முன்னணி விழாக்குழுவினர் சார்பில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இந்து முன்னணியினர் மாலை அணிந்து சிறப்பு பூஜை செய்தனர்.