திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-20 18:45 GMT

திருச்செந்தூர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருச்செந்தூர் பகவத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செந்தூர் நகர பொது செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜீ, நகர தலைவர் மாயாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசுராஜா, மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம், ஆறுமுகநேரி நகர துணை தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்