இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் அச்சங்குன்றத்தில் பள்ளி மாணவர்களிடையே மதமாற்றத்தை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு பள்ளி அமைக்கக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கடையநல்லூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்த முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா, துணைத்தலைவர் இசக்கி முத்து, செயலாளர் உலகநாதன், முருகன், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் குருசாமி, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்பட 40 பேரை கைது செய்தனர்.