இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளியில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 18:26 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட சுப்பிரமணிய சாமி கோவில் குளம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறையை கண்டித்து நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் எதிரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பிரபு தலைமை தாங்கினார். நாட்டறம்பள்ளி ஒன்றிய தலைவர் சிங்காரவேலன், நகர தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் தீனதயாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நாட்டறம்பள்ளி ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்