இந்து முன்னணி பிரமுகர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-20 19:31 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் கடந்த 17-ந் தேதி இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா சார்பில் தி.மு.க. எம்.பி ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், ராசா எம்.பி.யையும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அரசையும் விமர்சித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்