மாநகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

மாநகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

Update: 2022-08-12 19:53 GMT

தஞ்சையில் மாநகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் நேற்றுகாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முயற்சி செய்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணியினர் திடீரென தஞ்சை காந்திஜிசாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தினால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

28 பேர் கைது

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். போராட்டத்தில் 45 பேர் பங்கேற்று இருந்தாலும் 28 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே சோழன் நகரில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினையை சரி செய்வதற்காக மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை என கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆனால் பள்ளம் மூடப்பட்டு சாலையும் போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்