உதவி கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு

சேரன்மாதேவி உதவி கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-10-20 19:00 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி உதவி கலெக்டர் சபீர் ஆலமிடம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், சேரன்மாதேவி யூனியனுக்கு உட்பட்ட திருவிருத்தான்புள்ளி கிராம பஞ்சாயத்தில் பட்டங்காடு பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு தரப்பினர் வீடு என்ற பெயரில், முறையான அனுமதியின்றி ஜெபகூடம் ஒன்றை கட்டி வருகிறார்கள். அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்