அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் நடைபயணம்

தேன்கனிக்கோட்டையில் அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

Update: 2022-10-07 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டியில் குடியிருப்புகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும். ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டனர். இதற்கு சங்க தலைவர் துரை தலைமை தாங்கினார். வங்கி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சக்தி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நடைபயணம் நிறைவு பெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்