சத்துணவு ஊழியர்கள் நடைபயணம்

தர்மபுரியில் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் நடைபயணம் செல்கின்றனர்.

Update: 2022-06-05 16:12 GMT

தர்மபுரி:

சத்துணவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஓய்வு பெற்று செல்லும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 7 முனைகளில் நடைபயணம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஓசூரிலிருந்து தொடங்கிய நடைபயணத்திற்கு தர்மபுரி 4 ரோடு அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாநில செயலாளர் மகேஸ்வரி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, தமிழ்நாடு வேளாண்மை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயவேல், ஊராகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி குணசேகரன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி குமரன் ஆகியோர்பேசினர். முன்னதாக ஓசூரில் இருந்து வந்த நடைபயணத்திற்கு தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நடைபயணம் குழுவினர் சேலம் மாவட்டம் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்