நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாநாடு

கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-06-06 15:16 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்க 3-ம் ஆண்டு மாநாடு மற்றும் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சாலை ஆய்வாளர் அய்யனார் தலைமை தாங்கினார். துரைராஜ் வரவேற்றுப் பேசினார்.

மாநாட்டில் அமைப்புச் செயலாளர் எஸ். தங்கவேல், மதுரை ஜேசுதாஸ் டேனியல், உதவி கோட்ட பொறியாளர் பாபு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பரமசிவம், நெல்லை மாவட்ட தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் திருவேங்கட ராஜ், முத்துராமலட்சுமி, சங்கச் செயலாளர் எஸ். முருகன், ஆகியோர் பேசினர். சங்கச் செயலாளர் எஸ். முருகன், பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். முத்து பாண்டி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்