தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள்

தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது.

Update: 2023-10-17 18:45 GMT

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.32½ லட்சம் செலவில் மினி உயர்கோபுர மின்விளக்குகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, களக்கோடி தெரு, உப மின்நிலையம் பகுதி, அணைக்கரை தெரு, வாய்க்கால் பாலம், மவுண்ட் ரோடு, நடுபேட்டை தெரு, தெப்பக்குளம் பகுதி ஆகிய 9 இடங்களில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை தனுஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்