உயர் கோபுர மின்விளக்கு திறப்பு
அம்பை மெயின் ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடந்தது.
அம்பை:
அம்பை மெயின் ரோட்டில் பூக்கடை பஜார், அகஸ்தியர் கோவில் முன்பு, வண்டி மறிச்சியம்மன் கோவில் முன்பு ஆகிய இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 3 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. அவற்றை அம்பை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமசாமி, கோதர் இஸ்மாயில், சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் சோலைச்சாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.