ரூ.4¼ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு

பனைக்குளம் கிழக்கு பஸ் நிறுத்தம் அருகில் ரூ.4¼ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கை நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-21 18:45 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பனைக்குளம் கிழக்கு பஸ் நிறுத்தம் அரசு மருத்துவமனை அருகாமையில் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் அந்தப் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்திட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியை ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் சந்தித்து கிழக்கு பனைக்குளம் பஸ் நிறுத்தத்தில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் இதன் தொடக்க விழா நேற்று மாலை ஊராட்சி மன்ற தலைவர் பவுசியா பானு தலைமையில் நடந்தது. முஸ்லிம் நிர்வாக சபை, முஸ்லிம் பரிபாலன சபை நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உயர் கோபுர விளக்கு கல்வெட்டை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, மண்டபம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் முத்துக்குமார், ராமநாதபுரம் எம்.பி அலுவலக பொறுப்பாளர் அப்துல் ஜப்பார், பனைக்குளம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்