உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு - பயணிகள் அவதி

திருத்தணி அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.;

Update: 2022-12-25 10:21 GMT

திருத்தணி அடுத்த திருவாலங்காடு-மோசூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் நேற்று மதியம் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் சென்னை- கோயம்புத்தூர் இண்டர்சிட்டி, சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரூ லால்பார்க், சென்னை ஹீப்ளி வாராந்திர ரெயில் உள்பட அதிவிரைவு ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்கள் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் பழுது பார்க்கும் ஊழியர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திடீர் ரெயில் சேவை நிறுத்தத்தால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்