பகவதிபுரம்-விருதுநகர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பகவதிபுரம்-விருதுநகர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-29 18:45 GMT

செங்கோட்டை:

மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பகவதிபுரம்-விருதுநகர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மின்மயமாக்கும் பணிகள் நிறைவு

விருதுநகரில் இருந்து தென்காசி வழியாக புனலூர் வரையிலும் 140 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள பகவதிபுரத்தில் இருந்து விருதுநகர் வரையிலும் 110 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.80 கோடியில் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. தென்னக ெரயில்வே முதன்மை தலைமை மின் என்ஜினீயர் ஏ.கே.சித்தார்த்தா இந்த சோதனையை மேற்கொண்டார். அவருடன் மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் அனந்த், மின்சார பிரிவு உயர் அதிகாரிகள், ெரயில்வே கோட்ட அதிகாரிகள் சென்றனர்.

அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

இந்த வழித்தடத்தில் உள்ள பாலங்கள், சிக்னல்களை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் செங்கோட்டை அருகே பகவதிபுரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து மாலையில் பகவதிபுரம் ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து விருதுநகருக்கு அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். ரெயில் மின்பாதையில் உயர்மின்னழுத்த கம்பிகள் கம்பிகள் செல்வதால், அவற்றின் கீழ் பகுதியில் உயரமான பொருட்களை எடுத்து செல்லவோ, மழை நேரங்களில் குடை பிடித்து செல்லவோ, நடந்து செல்லவோ கூடாது என்று ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்