பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

Update: 2023-08-29 21:00 GMT

திருச்சிற்றம்பலம்;

பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

கடைமடை பகுதி

தஞ்சை மாவட்ட கடைமடை பாசனப்பகுதியில் இந்த ஆண்டு பருவமழை ஒரு குறிப்பிட்ட அளவு கூட பெய்யவில்லை. மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் கடைமடை பாசன பகுதியை இன்னும் முழுமையாக எட்டவில்லை. இதனால், கடைமடை பாசனப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. கடைமடை பாசனப்பகுதியில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்களையும் ஏரி குளங்களையும் நம்பி நடைபெறும் விவசாயப் பணிகள் தண்ணீர் இல்லாததால் பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளன.

பருவமழை

இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். குறிப்பாக ஆழ்குழாய் கிணறுகளை நம்பி நடைபெறும் விவசாய பணிகள் மட்டுமே ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பருவ மழை ெபய்யாததால் பட்டுக்கோட்ைட, திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். அக்னி நட்சத்திரத்துக்கு இணையாக சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் குளிர்பான கடைகளை நோக்கி செல்கிறார்கள்.இதனால் மழையை எதிர்நோக்கி தஞ்சை மாவட்ட கடைமடை பகுதி மக்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்