வைகை ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம்

லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-07-26 17:30 GMT

திருப்புவனம்,

லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

உயர்மட்ட பாலம்

திருப்புவனம் அருகே லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 16.92 கோடியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது:- லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் உள்பட இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான வைகையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலமானது முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூடுதல் பாலங்கள்

இதன் மூலம் லாடனேந்தல், கே.பெத்தானேந்தல், கணக்கன்குடி, மடப்புரம், தேளி, ஏனாதி, திருமாஞ்சோலை போன்ற கிராமங்கள் முக்கிய சாலையுடன் இணைக்கப்படுகிறது. ரூ.16.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த பாலமானது 9.95 மீட்டர் அகலமும், 374 மீட்டர் நீளத்துடன், 19 தூண்கள், 18 கண்களுடன், 7.5 மீட்டர் ஓடுபாதையுடன் கட்டப்பட உள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் கூடுதலான பாலங்கள் கட்டப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.700 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் பாலம் கட்டும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடன் உதவி

பின்பு லாடனேந்தலில் ஆவின் விற்பனை மையத்தை திறந்து வைத்து, கூட்டுறவு துறையின் சார்பில் திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பிற்கு வட்டி இல்லா கடன் தொகையாக 16 பேருக்கு ரூ. 8,54,000 கடன் உதவிகளையும், 300 உறுப்பினர்களுக்கு அதிகப்படியாக பால் உற்பத்தி செய்ததற்காக ஊக்கத்தொகையையும் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் யூனியன் தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் சென்றாயன், பால்வள துணை பதிவாளர் செல்வம், ஆவின் பொது மேலாளர் சாம்பமூர்த்தி, தனி அலுவலர் ராமச்சந்திரன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரசுவதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார், சாந்தா சகாயமேரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கே.பெத்தானேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமேஸ்வரி முனியாண்டி, துணைத்தலைவர் கோபி, அரசு வக்கீல் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்