மதுரை அருகே கோவில் கட்டுமான பணிக்கு ஐகோர்ட்டு தடை

மதுரை அருகே கோவில் கட்டுமான பணிக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது

Update: 2023-09-09 21:26 GMT


மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், கள்ளிக்குடி தாலுகா எம்.வேப்பங்குளம் கிராமத்தில் ஊர் பொதுச்சாவடி முன்பு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் சிலர் கோவில் கமிட்டி என்ற பெயரில் தன்னிச்சையாக செயல்பட்டு கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால், கோவிலுக்கு முன்புறம் உள்ள குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. பொதுப்பாதையை மறித்து கோவில் புனரமைப்பு என்ற பெயரில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், கோவில் கட்டுமான பணிகள் இனி நடக்காது என்று அரசுத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கட்டுமான பணிகள் நடக்கிறது. எனவே இந்த பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் என்று அரசுத்தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்ட பின்னர் பணிகளை மீண்டும் தொடங்கியது ஏன்? இதற்கு அனுமதியளித்தது யார்? சம்பந்தப்பட்ட கிராமத்தில் என்ன நடக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தற்போது நடந்து வரும் பணிகளுக்கு நீதிபதிகள் தடைவிதித்து உத்தரவிட்டதுடன், யாருடைய அனுமதியுடன் கட்டுமான பணிகள் நடந்தன என்பது குறித்து மதுரை கலெக்டர், வருவாய் அலுவலர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்