வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

உளுந்தூர்பேட்டையில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

Update: 2023-01-27 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நகர மன்ற துணை தலைவருமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேல், நகர செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், முருகன், சந்திரசேகரன், அன்புமணி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ் மொழி, மண் மற்றும் இனத்தை காக்க 100 ஆண்டுகளை கடந்தும் கட்டிக் காக்கும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. தி.மு.க. ஆட்சி இருக்கும் வரையிலும், தி.மு.க. கடைகோடி தொண்டன் இருக்கும் வரையிலும் தமிழகத்தில் இந்தியை நுழைய விடமாட்டோம் என்றனர். கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் ராஜசேகர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலா, இளைஞரணி அருண்ராஜ், வக்கீல் அணி அமைப்பாளர் இளமுருகன், சிவசங்கர், மாணவரணி பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்