மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி
வேடசந்தூரில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி நடந்தது.
வேடசந்தூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை காந்திராஜன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை இயக்குனர் சங்கரலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார். ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, மாநில திட்ட துணை இயக்குனர் வடிவேல், திண்டுக்கல் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை, குதிரைவாலி, வரகு, மக்காச்சோளம் ஆகியவை குறித்தும், பழமையான அடுப்பு, உரல், அம்மி, மாட்டுவண்டி பயன்பாடுகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எஸ். கல்லூரி முதல்வர் ராஜா, மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, விவசாயிகள் சங்க தலைவர் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வேடசந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னச்சாமி நன்றி கூறினர்.
முன்னதாக ஆத்துமேட்டில் இருந்து சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வல தொடங்கி பஸ்நிலையம் வழியாக கண்காட்சி நடைபெறும் இடத்தில் முடிவடைந்தது. இதில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள், எஸ்.ஆர்.எஸ். கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.