மூலிகை செடிகளை கண்டறியும் முகாம்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மூலிகை செடிகளை கண்டறியும் முகாம் நடந்தது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், குதிரை, குரங்கு, காட்டுப்பன்றி, நரி உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும், இந்த சரணாலயத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த 150-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளும் உள்ளன. அந்த மூலிகை செடிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், வனத்துறை மேலாண்மைக் குழு மூலிகை வைத்தியர் சையது பாரூக் தலைமையில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மூலிகை வைத்தியர்களுக்கு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடிகளை கண்டறிவது எப்படி என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. முகாமில் மூலிகை வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.