ஹென்றி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்

ஹென்றி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Update: 2022-10-11 18:45 GMT

தட்டார்மடம்:

மேலசாத்தான்குளம் ஹென்றி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் வீ.மாரியப்பன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் ஹேரிஸ்தாமஸ், வீரர்கள் தவசி ராஜ், சுரேஷ் குமார், சுப்பிரமணியன், முத்துமாரியப்பன், துரை, சீனிவாசன் ஆகியோர் தீபாவளியை விபத்தில்லாத தீபாவளியாக கொண்டாட மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், வடகிழக்கு பருவமழை பற்றிய ஒத்திகை மூலம் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்