கோழி திருடர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கோழி திருடர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Update: 2023-01-27 17:42 GMT

கோழி திருடர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அசைவ பிரியர்கள்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் அதைச் சார்ந்து ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயப் பயிர் சாகுபடி கைவிடும் காலங்களிலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.

இந்தநிலையில் சமீப காலங்களாக உடுமலை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது லாபகரமான தொழிலாக உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விட வீடுகள் மற்றும் விவசாய பூமிகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ஆரோக்கியமான சூழலில் வளர்கின்றன. மேலும் அவை இயற்கையான புழு, பூச்சி மற்றும் தானியங்களை தின்று வளர்வதால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. இதனால் அசைவப்பிரியர்கள் இந்தவகை நாட்டுக்கோழிகளை தேடிச் சென்று வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர்.

இதனால் பண்ணை நாட்டுக்கோழிகளை விட இந்தவகை நாட்டுக்கோழிகள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. இதுதவிர நாட்டுக்கோழி முட்டைகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒருசிலர் சண்டை சேவல்களை வளர்த்து பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

கோழி திருடர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது ஒருசில மதுப்பிரியர்கள் கோழிகளைத் திருடிச் சென்று சைட் டிஷ் ஆக சமைத்து சாப்பிட்டு விடுகின்றனர். சில இடங்களில் கோழிகளைத் திருடி விற்று மது வாங்கும் நபர்களும் உள்ளனர். இதுதவிர கோழிகளைத் திருடி விற்று பணம் சேர்க்கும் நோக்கில் ஒருசிலர் சுற்றி வருவதாகவும் தெரிகிறது. இதுபோன்ற நபர்கள் ஈரத்துணியை கோழிகள் மீது போட்டு அவை சத்தம் எழுப்பாத வகையில் திருடிச் செல்வதாகத் தெரிகிறது.

இவ்வாறு ஆங்காங்கே தொடர்ச்சியாக நடந்து வரும் கோழித்திருட்டு பற்றி விவசாயிகள் போலீசில் புகார் தெரிவிக்க விரும்புவதில்லை.ஒருசில இடங்களில் ஆடுகள் திருடப்படும் போது கூட புகார் தெரிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இது திருடர்களுக்கு சாதகமானதாக மாறி விடுகிறது. எனவே விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்ற தகவல் தற்போது விவசாயிகளிடையே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்