உதவும் கரங்கள் திட்டம்

உதவும் கரங்கள் திட்டத்தை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-10 19:17 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் வீடு இல்லாத தெரு ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் உதவும் கரங்கள் திட்டம் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்களிடம் அதிகமாக உள்ள உணவு பொருட்கள், பழங்கள், சேலைகள், வேட்டிகள் போன்ற பொருட்களை புதிய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் உதவும் கரங்கள் மையத்தில் வைத்து விடலாம். தேவைப்படும் ஏழை மக்கள் தாங்களாகவே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை உதவும் கரங்கள் மையத்தில் இருந்து எடுத்து கொள்ளலாம். இந்த திட்டத்தினை நகரசபை தலைவர் சுந்தரலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, நகர் நல அலுவலர் ராஜநந்தினி, நகர்மன்ற உறுப்பினர்கள் நாகநாதன், ஜோதி ராமலிங்கம், டுவிங்கிளின் ஞானபிரபா, சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்