உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ.14 லட்சம் நிதி துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
கிருஷ்ணகிரி:
வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் குடும்பத்திற்கு, 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசாரின் பங்களிப்பு தொகையாக ரூ.14 லட்சம் நிதி வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி கலந்து கொண்டு, இறந்த போலீஸ் குமார் குடும்பத்தினரிடம் ரூ.14 லட்சத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி சீனிவாசன், தர்மபுரி மணியம்மை மற்றும் போலீஸ் ஏட்டுகள் வெங்கடேசன், புஷ்பலதா, கற்பகம், பழனி, ராமச்சந்திரன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.