ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா.. அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு

ஊட்டி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2023-05-12 07:03 GMT

சென்னை,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில், ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகவேல் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். காலநிலை மாறும் என்பதால் ஹெலிகாப்டரை இயக்குவது பாதுகாப்பில்லை என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஐகோர்ட்டு விசாரித்த நிலையில், ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்