மாவட்டம் முழுவதும் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,342 வழக்குகளுக்கு தீர்வு

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,342 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

Update: 2023-09-10 18:45 GMT

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட செசன்சு நீதிபதி (பொறுப்பு) கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுரேஷ் வரவேற்றார். குடும்ப நல நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியகுளம் கோர்ட்டில் சார்பு நீதிபதி மாரியப்பன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கமலநாதன் ஆகியோர் முன்னிலையிலும், உத்தமபாளையம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவணசெந்தில் குமார், மாஜிஸ்திரேட்டு ராமநாதன் ஆகியோர் முன்னிலையிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

2,342 வழக்குகளுக்கு தீர்வு

ஆண்டிப்பட்டி கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பிச்சைராஜன் ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. போடி கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் புரிதா, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேலுமயில் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம், மொத்தம் 2,342 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் நிலுவை வழக்குகளில் ரூ.17 கோடியே 66 லட்சத்து 64 ஆயிரத்து 278 மதிப்பில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்