ரூ.1 லட்சம், 8 பவுன் நகை கொள்ளை

ஊட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் ரூ.1 லட்சம், 8 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.;

Update:2022-09-30 00:15 IST

ஊட்டி

ஊட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் ரூ.1 லட்சம், 8 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீசில் புகார்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. என்ஜினீயர். இவரது மகன், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதற்காக ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நாச்சிமுத்து, பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார். மேலும் அந்த வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து, வீட்டில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சோதனை செய்தார். அப்போது 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

தீவிர விசாரணை

அதில், நாச்சிமுத்து தங்கி உள்ள வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீடுகளில் ஆளில்லா நேரங்களில் மர்ம ஆசாமிகள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்