சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் டாஸ்மாக் குடோன் முன்பு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மதுபான பெட்டிகள் இறக்கு கூலி, ஏற்று கூலி ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.