கேப் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில் கேப் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-12-04 19:41 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் கேப் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில் சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 10-ம் நாள் திருவிழாவையொட்டி கேப் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி கன்னியாகுமரி சென்ற வாகனங்கள் அனைத்தும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வழியாக சென்றன. இந்த நிலையில் திருவிழா முடிந்ததால் கேப் ரோட்டில் நேற்று வழக்கம் போல் போக்குவரத்து இருந்தது.

எனினும் திருவிழாவை முன்னிட்டு ஆயுர்வேத கல்லூரி முன் இருந்து ரெயில்வே ரோடு சந்திப்பு வரை ரோட்டின் இருபுறமும் போடப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்படாமல் இருந்ததால் கடைகளுக்கு நேற்றும் மக்கள் வரத்து இருந்தது. இதன் காரணமாக கேப் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் சிறிய அளவில் இருந்த போக்குவரத்து நெரிசல் மாலையில் அதிகமாக இருந்தது. கோட்டார் முதல் வடசேரி பஸ் நிலையம் வரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பொதுமக்கள் அவதி

மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் வெகுநேரம் பஸ் நிலையத்திலேயே காத்திருந்தன. இதைத் தொடர்ந்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீசார் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மணிமேடை சந்திப்பில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த போக்குவரத்து ெநரிசல் சுமார் ஒரு மணி நேரம் வரை இருந்தது. அதுவரையில் வாகனங்கள் சாலையில் மெல்ல மெல்ல ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்