திருமருகல் பகுதியில் கடும் பனிப்பொழிவு

திருமருகல் பகுதியில் கடும் பனிப்பொழிவு

Update: 2023-02-12 18:45 GMT

திருமருகல் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

கடும் பனிப்பொழிவு

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 9 மணி வரையிலும் நீடிக்கும் பனி மூட்டத்தால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத சூழல் நிலவுகிறது.

முகப்பு விளக்கை எரிய விட்டபடி

நாகூர் - நன்னிலம் நெடுஞ்சாலையில் சாலையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். இதேபோல் மாலை நேரத்திலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியோர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்