லாலாபேட்டையில் கடும் பனிப்பொழிவு
லாலாபேட்டையில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை பகுதியில் நேற்று காலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்று வருகின்றன.