2-வது நாளாக கடும் பனிப்பொழிவு
நீடாமங்கலம், திருமக்கோட்டை பகுதிகளில் 2-வது நாளாக கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருமக்கோட்டை:
நீடாமங்கலம், திருமக்கோட்டை பகுதிகளில் 2-வது நாளாக கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பனிப்பொழிவு
திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தென்பரை, பாளையக்கோட்டை, மேலநத்தம், வல்லூர், மான்கோட்டைநத்தம், தச்சன்வயல், ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், வடக்கு தென்பரை, கழிச்சாங்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து2-வது நாளாக நேற்று மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டினர். இந்த பனிப்பொழிவால் அதிகமான குளிரும் இருந்தது. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள், பால்வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் பகுதியில் நேற்று 2-வது நாளாக கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் அதிகாலையில் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் கடும் பனி மூட்டத்தை கடந்து நீடாமங்கலம் ெரயில்நிலையத்துக்குள் வந்தது. அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் கார், வேன், லாரி, பஸ் போன்ற வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.