சாரல் மழையால் கடும் பனி மூட்டம்
வால்பாறையில் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன.
வால்பாறை
வால்பாறையில் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன.
மீண்டும் மழை
வால்பாறை பகுதியில் கடந்த 2 மாதமாக பருவமழை நின்று, இதமான காலநிலை நிலவி வந்தது. இதனால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 160 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 148 அடியாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பனிமூட்டம்
இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பெய்து வரும் ெதாடர் மழை காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் பட்டப்பகலிலேயே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும், வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையிலும் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்லும் நிலை உள்ளது. மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.