அய்யம்பேட்டை பகுதியில் விடிய, விடிய பலத்த மழை
அய்யம்பேட்டை பகுதியில் விடிய, விடிய பலத்த மழை
அய்யம்பேட்டை பகுதியில் விடிய,விடிய பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
விடிய,விடிய மழை
அய்யம்பேட்டை, பசுபதி கோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, மகாளிபுரம், கணபதி அக்ரகாரம், வீரமாங்குடி, பட்டுக்குடி, பெருமாள் கோவில், உள்ளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் சம்பா, தாளடி நடவு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல வயல்களில் நடவு பயிர்கள் மூழ்கியுள்ளது.
பயிர்கள் அழுகும் அபாயம்
மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அதேபோல கொள்ளிடம், காவிரி ஆற்றின் படுகை பகுதிகளில் செங்கல் சூளை பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த மழையால் செங்கற்கள் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.