இடி-மின்னலுடன் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டத்தில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை மழை
கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
நேற்று காலை முதலே வெயில் அதிகரித்த நிலையில் வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடையநல்லூர், அச்சன்புதூர், இடைகால், நயினாரகரம், கொடி குறிச்சி, வடகரை, போக நல்லூர், வலசை, கம்பனேரி மங்களாபுரம் காசிதர்மம், மேக்கரை, மற்றும் கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலோடு கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
செங்கோட்டை மற்றும் குண்டாறு அனைப்பகுதி புளியரை, செங்கோட்டை, பண்பொழி, வடகரை, காசிதர்மம், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7.15 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் தென்காசியிலும் நேற்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மழை பெய்தது.
கடந்த ஒரு மாத காலம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.