வந்தவாசி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை

வந்தவாசி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Update: 2023-05-22 13:33 GMT

வந்தவாசி

வந்தவாசி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் கொளுத்தும் வெயிலுக்கு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள அம்மையப்பட்டு, சென்னாவரம், மும்முனி, பாதிரி, வெண்குன்றம், காரணி, தெள்ளார், செம்பூர், அத்திப்பாக்கம், மாம்பட்டு, ஆராசூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் சுழன்று சுழன்று வீசியது.

மாலை 3.30 முதல் மாலை 4.30 மணிவரை ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்