அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை

அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்ததால் தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-30 20:25 GMT

அய்யம்பேட்டை:

கன மழை

அய்யம்பேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை அய்யம்பேட்டை, மானாங்கோரை, பசுபதிகோவில், வடக்குமாங்குடி, மாகாளிபுரம், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது.

மரம் முறிந்து விழுந்தது

இந்த மழையால் மானாங்கோரை பகுதியில் இருந்த புளியமரம் முறிந்து தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாய்ந்து விழுந்த மரத்தை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

மரம் சாய்ந்து விழுந்ததால் தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்