கனமழை எச்சரிக்கை: மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரெயில் சேவை ரத்து

மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-12-23 16:01 GMT

ராமேஸ்வரம்,

வானிலை ஆய்வு மையத்தின் ரெட் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் எண்.22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரெயில் எண் 22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரெயில் எண்.06652 ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு செய்யப்படாத எஸ்பிரஎஸ் ரெயில். ரெயில் எண். 06780 ராமேஸ்வரம் - மதுரை எஸ்பிரஎஸ் ரெயில் இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்