சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.

Update: 2022-11-04 02:29 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை, அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 33.5 மில்லி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 35.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்