கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-06 02:16 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு முதல் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மழை மிகத் தீவிரமடைந்தது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பள்ளி கல்லூரி சென்ற மாணவ மாணவிகள் குளிரில் நடுங்கியவாறு சென்றனர்.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல புதுச்சேரி மாநில ஆளுகைக்கு உட்பட்ட கேரளாவில் உள்ள பிராந்தியமான மாகே பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்